தாய்Tv

பிரதான செய்திகள்

போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் முல்லேரியா ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

(குறிப்பிட்ட நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் என பொலிஸார் உறுதி செய்துள்ளனர்)

குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு உடன் தகவல் வழங்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் குறித்த நபர் தொடர்பான தகவல்களை 0718591017, 0718592290, 0718591864 மற்றும் 119 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு வழங்க முடியும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து குறித்த நபர் இன்று (24) அதிகாலை தப்பிச் சென்றுள்ளதாகவும், இவர் இடது கால் உபாதைக்கு உள்ளான நபர் ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் திருகோணமலை, மார்பிள் பீச் ரோட், சீனக்குடா பகுதியை சேர்ந்த 41 வயதானமொஹமட் காசிம் மொஹமட் நசீம் என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2077 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2752 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, 677 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நேற்றைய தினம் 22 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்த நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 7 பேருக்கு இறுதியாக கொவிட்-19 தொற்றுறுதியானது.

அதேநேரம், சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேருக்கும், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுறுதியான ஒருவருடன் தொடர்பை பேணியிருந்த நுரைச்சோலை தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 752 ஆக உயர்வடைந்துள்ளது.

2 ஆயிரத்து 64 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

சிகிச்சை பெறுகின்ற நோயாளிகளின் எண்ணிக்கை 677 ஆக உயர்வடைந்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்துகமை-வெல்கந்த பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத சிலர் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும நாகொடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா அபாயம் காரணமாக ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையினால், இம்முறை ஹஜ் கடமைக்காக பதிவு செய்தவர்கள் அடுத்த வருடம் தமது பயணத்தை மேற்கொள்வதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஹஜ் பயணத்தை மேற்கொள்வதற்காக 25,000 ரூபா முற்கொடுப்பனவு செலுத்தியவர்கள் அதனை மீளப் பெறாமல், அடுத்த வருடம் ஹஜ் செய்ய விரும்பினால், எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வைப்புத் தொகையை மீளப்பெற விரும்புவோர், அதற்கான விண்ணப்பத்தை திணைக்களத்தின் இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு திணைக்களம் கோரியுள்ளது.

அந்த ஆவணம் கிடைக்கப்பெற்ற ஒரு மாத காலத்திற்குள் வைப்புத் தொகைக்கான காசோலை உரியவரின் பெயருக்கு அனுப்பப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை ஹஜ் பயணத்தை உறுதிப்படுத்துவதற்காக 4,413 பேர் 25,000 ரூபா முற்கொடுப்பனவு செலுத்தியுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப் தெரிவித்தார்.

நாட்டில் நேற்றைய தினத்தில் கொரோனா தொற்றுறுதியான எவரும் அடையாளம் காணப்படவில்லை.
இதற்கமைய, இதுவரையில், கொரோனா வைரஸ் தொற்றுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 730 ஆக உள்ளது.

கொவிட- 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 7 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, கொவிட்-19 தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த நிலையில்; சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 48 ஆக உயர்வடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், 671 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

அதேநேரம், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் இதுவரை 830 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக குறிப்பிடப்படுகிறது.

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget