ஊடகவியலாளர் பர்ஹான் ஏன் தாக்கப்பட்டார் !! ??

பர்ஹான் ஏன் தாக்கப்பட்டார் !! ??


– Fazhan Nawas –


ஊடகவியலாளர் பர்ஹான் நிஸாம்தீன் சில நாட்களுக்கு முன்னர் பயணித்துக்கொண்டிருந்த போது கடுமையான தாக்குதலுக்கு இலக்காகி காலி கராப்பிடிய வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் வெட்டுக்காயங்களையும் அவதானிக்க முடிகிறது.


நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்குவந்தன் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் கடுமையான தாக்குதலுக்கு இலக்கான முதல் சந்தர்ப்பம் இதுவாகும். பர்ஹான் நிஸாம்தீன் காலி நகரைச் சேரந்த சுதந்திர ஊடகவியலாளர் சிங்கள மொழிமூலம் இலங்கையில் மிக வேகமாக Breaking news நம்பகத்தன்மையுடன் வழங்கிவரும் பிபிசியின் சரோஜ் பத்திரன போன்றவர்களின் பட்டியலில் பர்ஹானையும் குறிப்பிட முடியும். Mainstream mediaக்களின் சிரேஷ்ட ஊடகவியலாளரோடு பர்ஹான் நெருக்கமான தொடர்புகளையும் பேணிவருகிறார்.


ஆனால் பர்ஹான் தாக்கப்பட்ட செய்தி இலங்கையின் எந்த பிரதான ஊடகத்திலும் வெளியிடப்படவில்லை உயர்மட்டதிலான அழுத்தங்கள் இதற்கான காரணம் என்றும் அறிவிக்கப்படுகிறது ஆனால் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவராலயம் மாத்திரம் சட்ட ஆலோசனைகளை பர்ஹானுக்கு வழங்கியுள்ளதோடு அவரது நிலையை தொடர்ந்தும் கரிசனையாக அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது தாக்குதல் தொடர்பில் தனதுக்கு இதுவரை எவரையும் சந்தேகிக்க முடியவில்லை என்றும் பர்ஹான் என்னிடம் தெரிவித்தார் பர்ஹான் மீதான தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் இந்த விடயத்தில் பிரதான ஊடக நிறுவனங்கள் மௌனம் சாதித்தமை கவலைக்குரிய விடயமாகும். _Meelparvai.net-

Post a Comment

Since you di8;d#&217nt limit it to just films I would argue that surely Buffy (TV version) deserves a place on the list, imo at number 1.In film I would back the suggestions of Ben from NotLD and Van Helsing from Dracula (Hammer version). I agree about Ripley in Alien.

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget