ஹஜ் விஷேட பாதுகாப்பு எற்பாடுகள் தயார் நிலையில்


ஹஜ் கடமைகள் தொடங்க இன்னும் ஒரு சில நாற்களே உள்ள நிலையில் இம்முறை ஹஜ் கடமைகளின் போது 17000 பாதுகாப்பு படையினர் விஷேட கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என்று சவூதி அரேபிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஹஜ் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பை வழங்க மூவாயிரம் நவீன வாகனங்களும் ஈடுபடுத்தப் படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புனித மக்கா நகரில் இன்று காலை இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஹஜ் கடமைகளின் போது சிவில் பாதுகாப்புக்கு பொறுப்பான கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் ஹமாத் பின் அப்துல் அஸீஸ் அல் முபத்தல் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். அவசர நிலைமைகளுக்கு ஈடு கொடுக்க கூடிய விதத்தில் திட்டமிடப்பட்ட முறையில் சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். மக்காவிலும் மதீனாவிலும் ஹஜ் பயணிகளுக்கு பூரண பாதுகாப்பை வழங்குவதே தமது பிரதான இலக்காக இருக்கும் என்றும் அவர் கூறினார். இம்முறை ஹஜ் ஏற்பாடுகளிலும் பாதுகாப்பிலும் 30 அரச நிறுவனங்கள் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளன. தீயணைப்பு படை பிரிவு, ஆஸ்பத்திரி சேவைகள் என்பனவும் தயார் நிலையில் உள்ளன. இவை தேவையான ஒத்திகைகளையம் நடத்தி உள்ளதாக அவர் மேலும் கூறினார். - udhayam-



Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget