பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு: முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷாரப் தேடப்படும் குற்றாவளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த பொதுத் தேர்தலில், அப்போதைய பிரதான எதிர்க்கட்சியான 'மக்கள் கட்சி'யின் பிரதமர் வேட்பாளராகக் களத்தில் இருந்தார் பெனாசிர் பூட்டோ. தேர்தலுக்குச் சரியாக இரண்டு வாரக்காலமே இருந்த நிலையில், டிசம்பர் மாதம் ராவல்பிண்டி நகரில், மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் பெனாசிர்.


இப்படுகொலையில் தொடர்புடையதாக தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மற்றும் 2 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று ராவல்பிண்டியில் உள்ள தீவிரவாதத் தடுப்பு மையத்தில் இவ்வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


இந்தத் தீர்ப்பில், குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், கொலை வழக்கில் சந்தேகத்துக்குரிய நபராக இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பர்வேஷ் முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது சொத்துகளையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget