அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரி பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேற்படி ஆர்ப்பாட்டம் நேற்றையதினம் (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்னால் முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டம் அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரியும், இந்திய தலைமை அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் அனிதாவின் மரணத்திற்கு மத்திய அரசு கட்டாயம் பதில் சொல்ல வேண்டும் எனவும், இனி வரும் காலங்களில் அனிதா போன்ற மாணவர் சமூகங்களை பாதுகாக்க நீட் தேர்வு பரீட்சையினை மத்திய அரசு முற்றாக நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அதிகளவில் புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment