நவகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொமிரிய - ராக்ஸபான சந்தியின் அருகாமையில், ஹங்வெல்ல தொடக்கம் கடுவெல நோக்கி பயணித்து கொண்டிருந்த பாரவூர்தியுடன் குறித்த நபர் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை குறித்த விபத்து இடம்பபெற்றுள்ளது.
குறித்த நபர் கிரிந்தவெல பிரதேசத்தினை சேர்ந்த, 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment