கடந்த வாரம் வெளிநாடொன்றில் இலங்கையை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சார்ஜாவிலுள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இலங்கையர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்கொலை செய்து கொண்ட குடும்பம் கடும் நிதி நெருக்கடியில் இருந்ததாக இலங்கை தூதுவர் சசித்ர யட்டோகொட தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே தற்கொலை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் தற்கொலைக்கான சரியான காரணம் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த குடியிருப்பில் இருந்த இரு ஆண்கள் மற்றும் பெண்கள் மூவர் தற்கொலை செய்ய முற்பட்டுள்ளனர். அதில் இரண்டு பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
ஏனைய மூவரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் சடலங்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
சடலங்களை அனுப்பி வைப்பது தொடர்பில் கொழும்பின் உத்தரவுக்காக காத்திருப்பதாக தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment