அனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்ற நடிகர் விஜய்..! தந்தைக்கு ஆறுதல் கூறினார்…!!
நீட் தேர்வால் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காத அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அனிதாவின் மரணத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடிகர் ராகவா லாரன்ஸ் சார்பில் ரூ 15 லட்சம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் குழுமூரில் உள்ள அனிதாவின் வீட்டிற்கு நடிகர் விஜய் நேரில் சென்றார்.
அங்கு அனிதாவின் தந்தைக்கு ஆறுதல் கூறினார். மேலும் அனிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அது மட்டும் அல்லாமல் நிதி உதவியும் அளித்ததார் என கூறப்படுகிறது.

Post a Comment