தாயைத்தாக்கி கொடுமைப்படுத்திய தகப்பனை, பொல்லினால் தாக்கி கொலை செய்த மகன், விளக்கமியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பதியத்தலாவைப் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
பதியத்தலாவைப் பகுதியின் சத்சர மாவத்தையில் 312 ஆம் இலக்க இல்லத்தில் வசித்து வந்த 46 வயது நிரம்பிய உபாலி லயனல் குரே என்பவரே மகனின் தாக்குதலினால் கொலையுண்டவராவார்.
இக்கொலை குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பதியத்தலாவ பொலிஸார் மஜிஸ்திரேட் நீதிபதி எஸ்.எம். சுமித்திபாலவின் உத்தரவிற்கமைய, கொலையுண்டவரின் மகனான
க.பொ.த. உயர்தர வகுப்பில் கல்வி கற்று வந்த 19 வயது நிரம்பிய மாணவன் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment