புதுடெல்லி(04 அக் 2017): கேரளாவில் வீட்டுச்சிறையில் இருக்கும் ஹதியாவுக்கு சுயமாக முடிவெடுக்கும் உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் முஸ்லிம் மதத்திற்கு மாறிய ஹதியா என்ற இளம் பெண்ணின் திருமணத்தை ரத்து செய்த கேரள உயர் நீதிமன்றம் அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தது.
ஆனால் வீட்டில் ஒரு கைதியைப் போல் நடத்தப்படுவதாகவும் ஹதியாவின் உரிமை மறுக்கப்படுவதாகவும் அவரது கணவர் ஷஃபின் ஜஹான் ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், பிறப்பித்த உத்தரவு:
– 24 வயதான ஹாதியாவுக்கு சுயமாக தீர்மானம் எடுக்கும் உரிமை உண்டு
– தந்தை மட்டுமே பாதுகாவலர் என்று கூற முடியாது
– தேவைப்பட்டால் ஹாதியாவின் கருத்தை கேட்ட பிறகு புதிய பாதுகாவலரை உச்சநீதிமன்றம் நியமிக்கும்
– சட்ட விதி 226இன் படி ஹேபியஸ் கார்பஸ் மனுவில் ஹாதியாவின் திருமணத்தை ரத்துச் செய்த உயர்நீதிமன்ற உத்தரவு சரியா? என்பதை உச்சநீதிமன்றம் பரிசோதிக்கும்
– ஹாதியா வழக்கில் என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்டது குறித்தும் பரிசோதிக்கும்.
மேலும் இவ்வழக்கு வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு வருகிறது.

Post a Comment