எதிர் வரும் சில நாட்களின் அதிகாலையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் உறைபனி பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின்பல பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் காலி மாவட்டத்தின் சில இடங்களில் மாலை 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
மேல் மற்றும் கேகாலை மாவட்டங்களில் அவ்வப்போது ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment