ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட கட்சியின் உயர் பதவிகளுக்கான புதிய உறுப்பினர்களுக்கு அந்தக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இதனைக் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அந்தக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று காலை இடம்பெற உள்ளது.
இந்தக் கூட்டத்தின் போதே உறுப்பினர்களின் புதிய பதவி நியமனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கட்சியின் பொதுச் செயலாளராக அமைச்சர் அகில விராஜ் காரியவசமும் தவிசாளராக அமைச்சர் கபீர் ஹசீமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாசவும், உப தலைவராக ரவி கருணாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய அமைப்பாளராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் பொருளாளராக ஹர்ச டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தொடர்பாடல் செயலாளராக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும், வணிக சங்க செயலாளராக அஜித் பி. பெரேராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை ஐக்கிய தேசிய கட்சியின் பதவிகள் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக அதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட அரசியல் சபை அலரிமாளிகையில் கூடிய போதே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
Post a Comment