அடுத்த ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக பிரதமர் ரணில் விக்கரமசிங்கவை களமிறக்கவுள்ளதாக, கட்சியின் பொது செயலாளர், அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகா நாயக்கர்களை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், தாம் வெற்றி கொள்வோம் என தெரிவித்த போது எவரும் நம்பிக்கை கொள்ளவில்லை.
அதுபோன்றே, அடுத்த ஜனாதிபதி தேர்தலையும் ஐக்கிய தேசிய கட்சியே வெற்றி கொள்ளும் எனவும் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.
Post a Comment