பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான நாடாளுமன்ற விவாதமும் வாக்களிப்பும் இன்று இடம்பெறவுள்ளது.
அதன்படி, இன்றைய நாடாளுமன்றம் முற்பகல் 9.30 க்கு கூடவுள்ள நிலையில் இரவு 9.30க்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
55 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெப்பத்துடன் கடந்த 21ஆம் திகதி, ஒன்றிணைந்த எதிர்கட்சி சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளித்தது.
அதில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் 51 உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளதுடன், சுதந்திர கட்சியின் ராஜாங்க அமைச்சர் டி.பி ஏக்கநாயக்க, பிரதியமைச்சரான நிஷாந்த ஹெட்டியாராச்சி, சுசந்த புஞ்சி நிலமே ஆகியோரும் அதில் கையெழுத்திட்டிருந்தனர்.
பிரதமருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைத்துள்ளது.
Post a Comment