இலங்கையில் மன்னார் உட்பட பல பகுதிகளில் இன்று(17) மாலை “ஷஹ்பான்” மாத தலைப்பிறை தென்பட்டது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை இதனை உறுதி செய்தது.
அதன்படி இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஷஹ்பான் மாதம் நாளை முதல் ஆரம்பமாவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
புனித ஷஹ்பான் மாதத்திற்கான தலைப்பிறைப் பற்றி தீர்மானிக்கும் மாநாடு இன்று(17) செவ்வாய்க்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளி வாசலில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment