பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தீர்மானம் மிக்க முக்கிய கூட்டம் இன்று (02) அலரி மாளிகையில் மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதனிடையே, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று பிரதமர் ரணில் விக்கரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது. இந்த சந்திப்பு நேற்று இடம்பெறவிருந்த நிலையில், அது இன்று வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று கூடவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று கூடவுள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இன்று முக்கிய கலந்துரையாடலை நடத்தவுள்ளது.
இதன்போது நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment