எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
அதன்படி ஒக்டைன் 92 வகை பெற்றோல் ஒரு லீட்டர் 137 ரூபாவாகவும், 95 ஒக்டைன் வகை பெற்றோல் 148 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாக அவர் கூறினார்.
அதேநேரம் ஒட்டோ டீசல் 109 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 119 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுகிறது.
அத்துடன் மண்ணெண்ணெய் ஒரு லீட்டர் 101 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுகிறது.
Post a Comment