டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள இவ்வருடத்திற்கான சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்க இறுதி திகதி எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி , குறித்த விண்ணப்பத்தை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
அதேபோல் , தாமதமாக கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த தினத்திலோ அல்லது அதற்கு முன்னரே கிடைக்கும் வகையில் பரீட்சை விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சை திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment