உலக பத்திரிகை சுதந்திர நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
ஊடகம், நீதி, சட்ட ஒழுங்குகளை பரிசீலிக்கும் அதிகாரத்தை தக்கவைத்தல் என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திர நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதற்கான யுனெஸ்கோவின் பிரதான நிகழ்வு கானாவில் உள்ள அக்ராவில் இடம்பெறுகிறது.
பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் மனித உரிமைகள் சாசனம் பகுதி 19இல் இடம்பெற்றுள்ள கருத்து வெளியிடும் சுதந்திரத்தை நினைவூட்டும் முகமாகவும், ஐக்கிய நாடுகளால் இந்த நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1993ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி மே மாதம் 3ஆம் திகதி வருடாந்தம் உலக பத்திரிகை சுதந்திர தினமாக அனுஷ்டிக்க தீர்மானிக்கப்பட்டது.
Post a Comment