உறவுமுறை திருமணங்களால் ரத்தத்தில் ஏற்படும் தலசீமியா என்னும் பரம்பரை மரபணு நோய் இன்றைய நாளில் அதிகரித்து வரு கிறது. இந்த நோய்க்கு மாதம் தோறும் உடலில் ரத்தம் ஏற்றாவிடில் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
தலசீமியா என்பது ரத்தத்தில் ஏற்படும் ஒருவகை பரம்பரை ரத்த அழிவு சோகை மரபணு நோய். பிறக்கும் குழந்தைகளுக்கு இந் நோயைக் கண்டுபிடித்து சிகிச்சை வழங்காவிட்டால் 2 வயதுக்குள் இறந்துவிடுவர். இந்த ஆபத்தான நோயைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் பரப்பவும், இந்நோய் பரவுவதைத் தடுக்கவும் ஒவ்வோர் ஆண்டும் மே 8-ம் தேதி உலக தல சீமியா தினமாக கடைப்பிடிக்கப்படு கிறது.
தற்போது இலங்கையில் தலசீமியா நோயால் பீடிக்கப்பட்ட சுமார் 5 லட்சம் பேர் வரை இனங்காணப்பட்டுள்ளதாக இலங்கை தலசீமியா வட்ட செயலாளர் ஜயந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.
Post a Comment