நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகராக ஐக்கிய தேசிய கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட ஆனந்த குமாரசிறி தெரிவாகியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தகுமாரசிறிக்கு 97 வாக்குகள் கிடைக்கப்பெற்றன.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட சுதர்ஷனி பெர்ணாண்டோ புள்ளேவிற்கு 53 வாக்குகள் கிடைக்கப்பெற்றன.
அளிக்கப்பட்ட வாக்குகளில் ஒருவாக்கு செல்லுபடியற்றது என்று சபாநாயகர் அறிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
அத்துடன், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலரும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலரும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
Post a Comment