பல்வேறு விடயங்களை வலியுறுத்தி, ஒன்றிணைந்த அஞ்சல் சேவையாளர்களின் தொழிற்சங்கம் நேற்று(11) பிற்பகல் 4 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு வழங்கப்படும் வரையில் போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
இலங்கை அஞ்சல் சேவையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜகத் மகிந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட உடனேயே அனைத்து அஞ்சல் சேவையாளர்களது விடுமுறையையும் ரத்து செய்வதாக, அஞ்சல் மா அதிபர் ரோஹன அபேவர்தன தெரிவித்துள்ளார்.
Post a Comment