முழுமையான நீண்ட சந்திரகிரகணமொன்று இன்று (27) ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும், அதனை இலங்கையில் பார்வையிட முடியும் எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவு அறிவித்துள்ளது.
21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட முழுமையான சந்திரகிரகணமாக இது அமையும்.
100 வருடங்களின் பின்னர் நிகழும் ஒரு வானியல் மாற்றமாகவும் இது காணப்படும் எனவும் அத்துறையின் பேராசிரியர் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று இரவு 10.45க்கு ஆரம்பாகும் இந்த சந்திரக்கிரணம், நாளை அதிகாலை 4.58 வரையில் தொடரும்.
இதனை இன்று இரவு 11.45 முதல் அதிகாலை 3.49 வரையில் வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது நிலவை சுற்றி சிவப்பு நிற வளையம் தோன்றும் என்பதால் ´ரெட் மூன்´ என அழைக்கப்படுகிறது.
Post a Comment