அம்பாறை மாவட்டம், சம்மாந்துறையை சொந்த இடமாகக் கொண்ட ஐ.எம். ஹனீபா, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் நேற்று(03) செவ்வாய்கிழமை வழங்கப்பட்டது.
முஸ்லிம் சமூகத்திலிருந்து 30 வருடங்களுக்குப் பின்னர் அரசாங்க அதிபர் பதவியை அலங்கரிக்கும் இரண்டாவது நபர், இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் சமூகத்திலிருந்து முதன் முதலாக அரசாங்க அதிபராகத் தெரிவாகி, மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றிய எம்.எம். மக்பூல், 1988ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதன் பின்னர் முஸ்லிம் சமூகத்திலிருந்து ஐ.எம். ஹனீபா தற்போது அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமையானது, முஸ்லிம்களுக்குள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment