இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவிருந்த தொடரூந்து பணியாளர்களின் 48 மணி நேர போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
தொடரூந்து பணியாளர்களி தொழிற்சங்கங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
அமைச்சரவை உபக்குழுவுடன் தொழிற்சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.
தொடரூந்து பணியாளர்களி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான யோசனை நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று, இதன்போது அமைச்சரவை உபக்குழுவினால் உறுதிவழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடரூந்து சாரதிகள், நேரக்கட்டுப்பாட்டாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய அதிபர்கள் இன்று நள்ளிரவு முதல் இந்த போராட்டத்தை மேற்கொள்ளவிருந்தனர்.
சிங்கப்பூர் - இலங்கை உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தல் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.
Post a Comment