இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கருத்து தொடர்பில் தொடர்ந்து நாடாளுமன்றில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதால் நாளை வரை சபை நடவடிக்கைகளை ஒத்திவைக்க சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்தார்.
விஜயகலா மகேஸ்வரனின் கருத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாடாளுமன்றம் சற்று நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் சபை மீண்டும் கூடிய வேளை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமக்கு அறிவித்தாக சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் தெரிவித்தார்.
எனினும் நாடாளுமன்றில் தொடர்ந்து அமைதியின்மை நிலவியதால் சபை நடவடிக்கைள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கை மேலோங்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்டுள்ள கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment