கண்டி காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட, மஹாசோன் அமைப்பின் பிரதானி அமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, எதிர்வரும் 10ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 4வது சந்தேக நபராக கைதானவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, குரல் பதிவு இயந்திரத்தை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் இதன்போது நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment