தொடரூந்து பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்துள்ளதால் இன்று இரவு வழமைபோல் இரவு நேர அஞ்சல் தொடரூந்து சேவைகள் இடம்பெறும் என தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனுடன் நாளை காலை முதல் ஏனைய தொடரூந்து சேவைகளும் வழமைபோல் இடம்பெறும் என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியுடன் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் பணிப்புறக்கணிப்பை கைவிடுவதற்கு தொடரூந்து தொழிற்சங்கங்கள் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment