கொழும்பு, மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜும்ஆ சந்தியில் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 31 வயதுடைய M.M. Siththi Rinosa எனும் முஸ்லிம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவத்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணை சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுதித்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இரு அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்தியவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே துப்பாக்கி சூடு நடத்தியதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவித்துள்ளன்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment