மாகாண சபைத் தேர்தல் புதிய முறைமையிலேயேதான் நடக்கும், என்கிறார் அமைச்சர் பைஸர்.

மாகாண சபைத் தேர்தலை புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடாத்துவதே அல்லாமல், ஊழல் நிறைந்த விருப்பு வாக்கு முறைமையில் நடத்துவதை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நினைத்துக் கூடப் பார்ப்பதில்லையென மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


ஊழல் நிறைந்த விருப்பு வாக்கு முறைமை இந்நாட்டுக்குப் பொருத்தமற்றது எனவும், கிராமத்துக்கு, தொகுதிக்கு பொறுப்புச் சொல்லும் பிரதிநிதிகள் தெரிவு செய்து கொள்ளும் புதிய தேர்தல் முறைமை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


அரசாங்கம் அதிகாரத்துக்கு வர முன்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியும் இதுவாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget