கலகொடஅத்தே ஞானசார தேரர் நோய் நிலைமை காரணமாக ஶ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுநீரக நோய் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஞானசார தேரருக்கு இதற்கு முன்னர் இரு முறை சிறுநீரக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் , அது தீவரமடைந்ததில் இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை அவரின் நோய் நிலைமை தொடர்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் , அந்த பரிசோதனைகளுக்கு அமைவாக இன்றைய தினம் சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2006ஆம் ஆண்டு கலுபோவில மருத்துவமனையில் மற்றும் இந்தியாவின் மருத்துவமனையொன்றில் இவருக்கு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment