பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராகும் அகில இலங்கை தனியார் பேருந்து சம்மேளனம்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்காக தமக்கு சாதகமான தீர்வொன்று கிடைக்கதவிட்டால், எதிர்காலத்தில் நாடாலாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தயார் என அகில இலங்கை தனியார் பேருந்து சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமது சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவர் நாளைய தினம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அதன் செயலாளர் அஞ்சன ப்ரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் எரிபொருள் சூத்திரத்திற்கு அமைய பேருந்து கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான சூத்திரம் ஒன்றைத் தயாரிக்க அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளத் தயார் என்று அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget