இரண்டாவது “ஜனபல” மக்கள் எழுச்சிப் பேரணி கண்டியில்.

கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த “ஜனபல” மக்கள் எழுச்சிப் பேரணியை கண்டி மாநகரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பேரணி நடைபெறும் தினம் மற்றும் ஏனைய ஏற்பாடுகள் குறித்து பின்னர் அறிவிப்போம் எனவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார்.

நேற்று நடைபெற்ற பேரணியில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர். நாம் நடத்திய பேரணி முழு அளவில் வெற்றியடைந்துள்ளது. அதன் மூலம் மக்கள் வழங்கியுள்ள செய்தியை அரசாங்கம் கேளிக்கையாகக் கொள்ளக்கூடாது. உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துமாறும் அவர் சவால் விடுத்தார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget