வரவு செலவுத் திட்ட யோசனையை முன்வைக்க எதிர்பார்த்துள்ள தினதில் மாற்றம்.

நிதி அமைச்சினால் வரவு செலவுத் திட்ட யோசனையை முன்வைக்க எதிர்பார்த்துள்ள தினத்தை மாற்றம் செய்வதற்கு அரசாங்க தரப்பு எம்.பி.க்கள் குழு தீர்மானித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற அரசாங்க தரப்பு எம்.பி.க்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்ட யோசனை எதிர்வரும் நவம்பர் 08 ஆம் திகதி முன்வைக்கப்பட்டு டிசம்பர் 08 ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடாத்தப்பட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எதிர்க் கட்சியினால் இந்த நாட்கள் போதாது என தெரிவிக்கப்பட்ட கருத்தையும் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் நவம்பர் 08 ஆம் திகதி முன்வைக்கப்படவிருந்த வரவு செலவுத் திட்ட யோசனையை எதிர்வரும் நவம்பர் 05 ஆம் திகதி முன்வைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டிசம்பர் 08 ஆம் திகதி வரவு செலவுத் திட்ட யோசனை தொடர்பான இறுதி வாக்கெடுப்பு நடாத்தப்படவுள்ளதாகவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget