அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு.

அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (13) நண்பகல் 12 மணிக்கு இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.

அவசர அமைச்சரவை கூட்டம் தொடர்பில் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தால் தொலைபேசியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாராந்த அமைச்சரவை கூட்டம் வழமைபோல நேற்று (12) நடைபெற்றது.

இதன்பின்னர், இன்று அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளபோதிலும், அதற்கான காரணம் தொடர்பில் இதுவரையில் எவ்விதத் தகவலும் பதிவாகவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget