ஹபரணை – பலுகஸ்வெவக்கும் இடையே தொடரூந்தில் மோதி பலியான யானைகளின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்திற்கு பின்னர் மட்டக்களப்பு வரையான தொடரூந்து சேவை தற்போது மஹவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கொலன்னாவையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் எற்றிச் சென்ற தொடரூந்தில் யானைகள் சில மோதியுள்ள நிலையில், தொடரூந்தும் தடம்புரண்டுள்ளது.
இந்நிலையில் அதனை மீள் தடமேற்றும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே மட்டக்களப்பு வரையான தொடரூந்து சேவை, மஹவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
Post a Comment