கண்டி கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 08 பேருக்கும் எதிர்வரும் நவம்பர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அமித் வீரசிங்க கடந்த மார்ச் மாதம் 08 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேகநபர்கள் இன்று தெல்தெனிய நீதவான் ஷானக கலன்சூரிய முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.
Post a Comment