சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் - ஒருவர் பலி.

மாத்தறை ஊறுபொக்க ஹூலங்கந்தை தம்பஹல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் 9.15 இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

உந்துருளியில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவர் மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரிகள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சம்பவ இடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதாகவும் காவல் துறையினரால் தற்பொழுது நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget