பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

நாட்டின் நிலவும் மழையுடனான வானிலை இன்றைய தினம் மேலும் அதிகரிக்கக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இந்த நிலையில் அதிக மழைவீழ்ச்சி காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப் பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என நீர்வழங்கல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், பராக்கிரம சமுத்திரத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால், அதன் 10 வான்கதவுகளில் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

விக்டோரியா நீர்க்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் சற்றுமுன் திறக்கப்பட்டுள்ளன.

ராஜாங்கணை நீர்த்தேகத்தின் இரண்டு வான்கதவுகளும், அங்கமுவ நீர்த்தேகத்தின் இரண்டு வான்கதவுகளும், பொல்கொல்ல நீர்த்தேகத்தின் இரண்டு வான்கதவுகளும், குக்குளே கங்கை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும் திறக்க்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த நீர்த்தேக்கத்தை அண்டி வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget