19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை இளையோர் அணியை வீழ்த்தி இந்தியா இளையோர் அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய இளையோர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட் இழப்பிற்கு 304 ஓட்டங்களைப்பெற்றது.
பதிலுக்கு 305 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி 38.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
அதன்படி, 144 என்ற ஓட்ட வித்தியாசத்தில் 2018ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ணத்தை இந்தியா அணி கைப்பற்றியுள்ளது.
Post a Comment