அம்பன்பொல மற்றும் பலுகஸ்வௌ முதலான பகுதிகளில் தொடரூந்தில் மோதி இரண்டு காட்டு யானைகள் பலியாகின.
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தொடரூந்தில் நேற்றிரவு அம்பன்பொல பகுதியில் இரண்டு காட்டு யானைகள் மோதுண்டுள்ளன.
அதில் ஒரு காட்டு யானை பலியானதுடன், மற்றுமொரு காட்டு யானை பலத்த காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த தொடரூந்தில் பலுகஸ்வௌ பகுதியில் மோதுண்ட காட்டு யானை ஒன்று பலியானது.
இந்த விபத்து காரணமாக, குறித்த தொடரூந்து தடம்புரண்டுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், குறித்த தொடரூந்து பாதையில் பயணிக்கும் அனைத்து தொடரூந்துகளின் சேவைகளும் கெக்கிராவை தொடரூந்து நிலையம்வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவ கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதேநேரம், இந்த வருடத்தின் இதுவரையான 10 மாத காலப்பகுதியில் தொடரூந்தில் மோதுண்டு 10 காட்டு யானைகள் பலியாகியுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment