நாட்டின் பல்வேறு பாகங்களில் இன்றைய தினமும் மழை பெய்யக்கூடும் என்று காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்றைய தினம் மழை பெய்யக்கூடும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டின் சில பிரதேசங்களில் இடைக்கிடை மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீச கூடும் என தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பிரதேசங்களில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என்பதுடன் வடக்கு கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் குளிரான காலநிலை காணப்பட கூடும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment