பாடசாலைக்கு முன்னால் கைக்குண்டு - செயலிழக்க செய்ய படையினர் தீவிரம்....!
அநுராதபுரம் - ரம்பேவ - கோனேவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால் வீதியோரத்திலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
காவல் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டுள்ள கைக்குண்டை செயலிழக்க செய்ய வெடிகுண்டு செயலிழக்க செய்யும் பிரிவினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment