இலங்கையில் நிலவும் வெப்பநிலை தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்.
140 வருடங்களுக்கு பின்னர் பதிவாகியுள்ள அதிக வெப்ப காலநிலை தற்போது நாட்டில் தாக்கம் செலுத்தியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆய்வு பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
புவி வெப்பமடைதல் அதிகரித்துள்ளதோடு எல்னினோ காலநிலையும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய கடந்த 30 வருடங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களுடன், அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வெப்பநிலையின் அளவு 3 முதல் 4 செல்சியஸ் அதிகரித்துள்ளது.
இதனுடன் நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
நிலவும் வெப்ப காலநிலைக்கு அமைய உடலை குளிர்ச்சியான நிலையில் வைப்பதற்கு அவதானம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment