அவசர நிலைமை காரணமாக பல கட்சிகளின் மே தின கூட்டங்கள் இரத்து.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே மாதம் முதலாம் திகதி கொழும்பு நகர சபை மைதானத்தில் இடம்பெறவிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசினால் நுவரெலியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மே தின கூட்டம் ரத்து செய்துள்ளதாக
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொண்டமான் இதனை தெரிவித்தார்.
இதனிடையே, தமிழ் முற்போக்கு கூட்டணியின், மேதின கூட்டமும் பெரும்பாலும் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இல்லை என அதன் பிரதி தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment