தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் தோட்டத்தின் கிழக்குப் பிரிவிலுள்ள தொடர் குடியிருப்பில் நேற்றிரவு (29ஆம் திகதி) பரவிய தீ காரணமாக 24 வீடுகள் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளன.
நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் ஏற்பட்ட தீப்பரவலில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 24 வீடுகளைக் கொண்ட குறித்த லயன் குடியிருப்பில் இருந்த தமது சொத்துக்களும் முற்றாக அழிவடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் தலவாக்கலை ஹொலிரூட் தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment