2018-2019 ஆண்டு பல்கலைக்கழக கல்விக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இம்முறை 31 ஆயிரத்து 500 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் பி.எஸ்.எம்.குணரத்ன தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை கடந்த வருடத்திலும் பார்க்க சுமார் 1500 பேர் வரை அதிகமானதாகும்.
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் புதிய மாணவர்களுக்கான கற்கை நெறிகள் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Post a Comment