மீண்டும் காவல்துறை ஊரடங்கு சட்டம்
நாடளாவிய ரீதியில் இன்று இரவு 9.00 மணிமுதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கம்பஹா காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு 7.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளத காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன் வடமேல் மாகாணத்தில் அமுல்பபடுத்தப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை 2 மணித்தியாலங்கள் தளர்த்தப்பட்டுள்ளது.
இதற்கமைய , இன்று மாலை 6.00 மணிமுதல் நாளை காலை 6.00 மணி வரை வடமேல் மாகாணத்தில் காவற்துறை ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

Post a Comment