பிரதமரின் அதிரடி உத்தரவு.
நாடுமுழுவதும் உள்ள அனைத்து வீதிகளின் பெயர் பலகைகளும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மாத்திரமே காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான பணிப்பரை உள்நாட்டு அலுவலகள் அமைச்சருக்கு பிரதமரால் வழங்கப்பட்டுள்ளதாக, பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் தவிர்ந்த வேறு எந்த மொழியிலும் வீதிகளின் பெயர்களை குறிப்பிடும் பெயர் பலகைகள் அமைக்கப்படக்கூடாது என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

Post a Comment