நாடளாவிய ரீதியில் போதைப்பொருளைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 22 ஆம் திகதியிலிருந்து ஜூலை மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதி போதைப்பொருளைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் போதைப்பொருட் பயன்பாட்டினை இல்லாதொழிக்கும் வகையிலேயே, நாடளாவிய ரீதியில் போதைப்பொருளைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு வாரம் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

Post a Comment